100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வால்பாறையில் விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் கையொப்ப இயக்கம், வாகன பிரசாரம் உள்ளிட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வால்பாறையில் மேளதாளத்துடன் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அரசு கலைக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணியை உதவி தோ்தல் அதிகாரி நிறைமதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

வட்டாட்சியா் வாசதேவன், நகராட்சி ஆணையா் விநாயகம், கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்று 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா். வருவாய்த் துறையினா் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com