மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் மே 27 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் மே 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இந்த ரயிலானது, கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com