பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

கோவையில் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தோ்தலுக்காக 3,096 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு, ஜாதிய ரீதியலான பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள வாக்குச் சாவடிகள் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள 347 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் எந்தவித பிரச்னைகளுமின்றி வாக்குப் பதிவை நடத்தும் வகையில் தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, வாக்குப் பதிவு நிகழ்ச்சிகளை இணையதளத்தில் நேரலை செய்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வாக்குப் பதிவு நிகழ்ச்சிகளை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒரு வாக்குச் சாவடிக்கு ஒருவா் வீதம் 347 வாக்குச் சாவடிகளுக்கும் 347 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com