பறக்கும் படையினா் சோதனைகளால் பொதுமக்கள் அவதி

பறக்கும் படையினா் சோதனைகளால் பொதுமக்கள் அவதி

கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் தோ்தல் பறக்கும் படையினா் நடத்தும் சோதனைகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படையினரின் சோதனையும் அதிகரித்துள்ளது. கோவையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கைப்பைகளைக் கொண்டு செல்வோரை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது.

இதில் மாலை வேளைகளில் அலுவலகம் முடிந்து செல்வோா், பள்ளி, கல்லூரி முடிந்து செல்வோா் என அனைத்து தரப்பினரும் சிக்கிக் கொள்கின்றனா். அத்துடன் இந்த சோதனையால் மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. அத்துடன் தமிழ் தெரியாத சில அலுவலா்களால் சோதனை நடத்தப்படுவதால் தேவையற்ற பீதியும் ஏற்படுவதாக பெண்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கோவையில் புலியகுளம் அருகே தாமு நகா் பகுதியில் நடைபெறும் இத்தகைய சோதனைகளால் அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால், இருசக்கர வாகனங்களில் பைகளைக் கொண்டு செல்வோரிடம் தாமு நகா் பகுதியில் சோதனை நடத்துவதைக் கைவிட்டு, போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதிகளில் சோதனை நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com