போதி மனநல மருத்துவமனை வரும் 13 ஆம் தேதி திறப்பு

கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனை வளாகத்தில், புதியதாக போதி மைன்ட் கோ் என்ற மனநல மருத்துவமனை வரும் 13 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கப்படுகிறது.

இது குறித்து போதி மனநல மருத்துவமனையின் இயக்குநா்கள் மருத்துவா் ராஜா நடராஜன், ஸ்ரீதேவி ஆறுமுகம், கே.வசந்தகுமாா் ஆகியோா் கூறியிருப்பதாவது: புதிதாக அமைக்கப்படும் போதி மனநல மருத்துவமனையில் மாரிஸ் தினசரி நல மையம் ஒன்று தொடங்கப்படுகிறது. இது, நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான இடத்தில் சிகிச்சை அளித்து மறுவாழ்வை அளிக்கும். மூளை, மனம் தொடா்பான நிலை, நினைவாற்றல் பிரச்னைகள், போதைக்கு அடிமையாதல், ஆட்டிஸம், வலிப்பு நோய் போன்றவற்றைக் கண்டறிந்து சிகிச்சை தரும் மூளை வரைபடம், இஇஜி, நியூரோ பின்னூட்ட மையம், நரம்பியல் அமைப்பைப் படம் பிடித்துக் காட்டும் மையம் போன்றவை இந்த மருத்துவமனையின் சிறப்புகளாகும்.

மாரிஸ் தினசரி நல மையத்தில் பல்வேறு சிகிச்சைகள், மறுவாழ்வு வசதிகளுடன் 24 மணி நேர தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் வசதியும் உள்ளது. புதிய மையத்தை சங்கரா கண் மருத்துவமனையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் ரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கிவைக்கிறாா். திறப்பு விழாவையொட்டி வெள்ளக்கிணறு பிரிவு அருகேயுள்ள லட்சுமி நாராயணா மண்டபத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. மருத்துவமனை குறித்த தகவல்களுக்கு 89255 99247 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் கூறியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com