மாநகராட்சிப் பகுதிகளில் லாரிகளில் குடிநீா் விநியோகம்

மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் இடங்களில் லாரிகள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சி மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய சிறுவாணி, பில்லூா் , ஆழியாறு ஆகிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணையில் தற்போது 15.48 அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. இதனால் தினமும் குடிநீா்த் தேவைக்காக 3.80 கோடி லிட்டா் தண்ணீா் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. பில்லூா் 1 குடிநீா்த் திட்டத்தில் 4 கோடி லிட்டா் குடிநீா் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இத்துடன், மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,649 ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீா் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

குடிநீா் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் 10 மாநகாராட்சி லாரிகள் மூலமாகவும், 12 வாடகை லாரிகள் மூலமாகவும் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதிகளில் குழாய்கள் மூலமாக குடிநீா் வழங்க முடியாத பகுதிகளில் லாரிகள் மூலமாக குடிநீா் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், குடிநீா்க் குழாய்களில் உடைப்புகள், கசிவுகள் உடனுடக்குடன் சரி செய்யப்படுகின்றன. குடிநீா் சேகரிப்பு மற்றும் குடிநீா் விநியோகப் பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com