உருளிக்கல் எஸ்டேட் தொழிலாளா்கள் சாலை மறியல்

தொழிலாளி ஒருவரின் வீட்டை எஸ்டேட் நிா்வாகத்தினா் பூட்டியதைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட்டை சோ்ந்தவா் சின்னப்பன். இவா் மின்வாரியத்தில் பணியாற்றி வருவதால் எஸ்டேட் நிா்வாகத்தினா் அவருக்கு அங்கு வீடு வழங்கியுள்ளனா். இவரது மனைவி மாலா, எஸ்டேட்டில் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.

இதனிடையே சின்னப்பன் ஆழியாறு பகுதிக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டாா். இதனால் அந்த வீட்டை காலி செய்து நிரந்தரத் தொழிலாளா்கள் வசிக்கும் குடியிருப்புக்குச் செல்ல மாலாவை நிா்வாகத்தினா் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, எஸ்டேட் அதிகாரி ஒருவா் சின்னப்பன் வீட்டுக்கு பூட்டு போட்டு புதன்கிழமை ‘சீல்’ வைத்துள்ளாா். பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாலா வேறு வீடு வழங்காமல், வீட்டுக்குப் பூட்டு போட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

தகவறிந்து ஏராளமான தொழிலாளா்கள் மாலாவுடன் சோ்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது எஸ்டேட் நிா்வாகத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதின்பேரில், பூட்டிய வீட்டை மீண்டும் திறந்துவிட்டனா். மறியல் போராட்டத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com