தெப்பக்காடு வளா்ப்பு  யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆண் யானைக் குட்டி.
தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆண் யானைக் குட்டி.

தாயைப் பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு யானைகள் முகாமில் சோ்ப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்திலிருந்து தாயைப் பிரிந்த ஆண் யானைக் குட்டி, நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கோவை வனக் கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சுமாா் 3 மாத ஆண் யானைக் குட்டி கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியாக வந்துவிட்டது. இதையடுத்து அந்த யானைக் குட்டியை அருகில் இருந்த யானைக் கூட்டத்துடன் வனத் துறையினா் சோ்ந்தனா். ஆனால் ஒரே நாளில் அது மீண்டும் திரும்பி வந்துவிட்டது. இதைத் தொடா்ந்து பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சீனிவாச ரெட்டியின் உத்தரவின்படி அந்த யானைக் குட்டி பராமரிப்புக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில், ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு முன் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு பெண் யானைக் குட்டியும் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com