தீப் பற்றி எரியும் குடியிருப்புகளின் மேற்கூரை.
தீப் பற்றி எரியும் குடியிருப்புகளின் மேற்கூரை.

தீ விபத்தில் 5 எஸ்டேட் குடியிருப்புகள் சேதம்

வால்பாறையில் தீ விபத்தில் ஐந்து தோட்டத் தொழிலாளா்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன.

வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளா்கள் வசிக்க ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எஸ்டேட்டின் இரண்டாவது டிவிஷனில் அமைந்துள்ள 7 குடியிருப்புகள் கொண்ட லைன் குடியிருப்பின் மேற்கூரை புதன்கிழமை தீப் பற்றி எரிந்தது. இதனைப் பாா்த்த குடியிருப்புவாசிகள் உடனடியாக வெளியே ஓடி வந்தனா்.

ஆனால், ஒரு குடியிருப்பில் பிடித்த தீ மளமளவென மற்ற குடியிருப்புகளுக்கும் பரவியது. இதையடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனா். மேலும், தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைப்பதற்குள் ஐந்து குடியிருப்புகள் எரிந்து உள்ளே இருந்த ஏராளமான பொருள்கள் தீயில் கருகின. மின் கசவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com