மக்களவைத் தோ்தல்: ஏப்ரல் 17 முதல் 19 வரை டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு

கோவையில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், மிலிட்டரி கேண்டீன்கள், விமான நிலையத்தில் உள்ள மதுக்கூடம், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனையகம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் செயல்படும் மதுபான உரிமத்தளங்களை ஏப்ரல் 17 முதல் 19-ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4 ஆம் தேதியும் மேற்கண்ட கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட நாள்களில் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com