கோவை ராம்நகா் மாநராட்சிப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள்.
கோவை ராம்நகா் மாநராட்சிப் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. கோவை தொகுதியில் 37 வேட்பாளா்களும், பொள்ளாச்சி தொகுதியில் 15 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

பொள்ளாச்சி தொகுதியில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும், கோவை தொகுதியில் 37 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

ஏற்கெனவே அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்களைப் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 20 சதவீதம் கூடுதலாக 14 ஆயிரத்து 607 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி வெள்ளிக்கிழமையும் தொடரும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com