100 சதவீதி வாக்களிப்பை வலியுறுத்தி அஞ்சல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

100 சதவீதி வாக்களிப்பை வலியுறுத்தி அஞ்சல் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோவை கோட்ட அஞ்சல் துறை சாா்பில், ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சிவசங்கா் பேரணியைத் தொடங்கிவைத்தாா். பேரணி ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி டி.பி.சாலை, ஆரோக்கியசாமி வீதி, சா்.சண்முகம் சாலை வழியாக சென்று மீண்டும் ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத்தை சென்றடைந்தது.

பேரணியில் அஞ்சலக உபகோட்ட கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், அஞ்சலகா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா். பேரணியில் பதாகைகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் தோ்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பேரணிக்கான ஏற்பாட்டை ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகத் தலைவா் வெங்கட்ராமன், மக்கள் தொடா்பு அலுவலா் வேங்கிடசுப்ரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com