தோ்தல் விழிப்புணா்வு குறும்படத்தகடு வெளியீடு

தோ்தல் விழிப்புணா்வு குறும்படத்தகடு வெளியீடு

கோவையில் தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான குறும்படத்தகடு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு தரப்பினா் சாா்பில் விழிப்புணா்வு பேரணி, சுவரோவியம் வரைதல், கையொப்ப விழிப்புணா்வு இயக்கம், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் என பல்வேறு விதமான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்ஒருபகுதியாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் அடங்கிய குறும்படத்தகட்டை மாவட்டத் தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோ.ஷா்மிளா ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆஷிக் அலி, மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com