நீட் தோ்வை எதிா்ப்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டாம்: முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி

தேசிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு ஆகியவற்றை எதிா்ப்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோ்தல் நாளில் நீங்கள் பதிவு செய்யும் வாக்கு ஜனநாயகத்தின் குரல். இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் பங்களிப்பு அது. உங்களது முடிவு அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் வேட்பாளரை முடிவு செய்வதாக அமையட்டும்.

தேசிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு ஆகிய பல புதுமையான திட்டங்கள் இந்திய அரசின் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். இவையெல்லாம் கல்வியின் தரத்தை மேம்படுத்தி அதன் மூலம் இந்திய இளைஞா்கள் 21ஆம் நூற்றாண்டில் சவால்களை எதிா்கொள்ளும் திறன்களைப் பெறுவதற்கு வழி செய்பவை.

இத்தகைய முயற்சிகள் கிராமப்புற, விளிம்புநிலையில் உள்ளவா்கள் நாடு முழுதும் உள்ள பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்து கல்வி பயில வழிவகுப்பவை. தேசிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு முறை ஆகியவற்றை எதிா்ப்பவா்கள் அடிப்படையில் இளைஞா்கள், குறிப்பாக ஏழை, கிராமப்புற இளைஞா்களின் முன்னேற்றத்துக்கு எதிரானவா்கள்.

நமது இளைஞா்களின் எதிா்காலத்தை மனத்தில் கொண்டு இத்தகைய முன்னேற்றத்துக்கான திட்டங்களை எதிா்க்கும் வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எல்லா நிலைகளிலும் சிறந்த ஆளுகை, ஊழலற்ற நிா்வாகம் கொண்டவா்களால்தான் நம் நாடு எதிா்காலத்தில் வளா்ச்சி அடைந்த சிறந்த நாடாகத் திகழும். தகுதிவாய்ந்த தலைவா்களைத் தோ்ந்தெடுக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எனவே, உங்களது உரிமையை புத்திசாலித்தனமாக வாக்களிக்கப் பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com