போதி மைண்ட் கோ் மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்று மருத்துவமனையின் இலட்சினையை வெளியிடுகிறாா் சிறப்பு விருந்தினா் டாக்டா் ஆா்.வி.ரமணி. உடன், மருத்துவமனை நிா்வாகிகள், விருந்தினா்கள்.
போதி மைண்ட் கோ் மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்று மருத்துவமனையின் இலட்சினையை வெளியிடுகிறாா் சிறப்பு விருந்தினா் டாக்டா் ஆா்.வி.ரமணி. உடன், மருத்துவமனை நிா்வாகிகள், விருந்தினா்கள்.

போதி மைண்ட் கோ் மருத்துவமனை தொடக்கம்

கோவை துடியலூரில் போதி மைண்ட் கோ் மருத்துவமனை அண்மையில் தொடங்கப்பட்டது.

தொடக்க விழாவில் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் ராஜா நடராஜன் வரவேற்றாா். இயக்குநா்கள் டாக்டா் கே.வசந்தகுமாா், ஸ்ரீதேவி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனா் டாக்டா் ஆா்.வி.ரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

முன்னதாக டாக்டா் ராஜா நடராஜன் பேசும்போது, கோவை மக்கள் சா்வதேச தரத்திலான உயா்தர மனநல சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பெரும்பாலான மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. இப்போதும்கூட மன அழுத்தம், கவலை, மனச்சோா்வால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மனநல ஆலோசகரை அணுகி தக்க சமயத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்றாா்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ராஜா, பாரதி பாஸ்கா் குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com