மின் கணக்கீடு செய்ய இயலாததால் முந்தைய கட்டணம் செலுத்த வலியுறுத்தல்

கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பகுதிகளில் மின் கணக்கீடு பணி மேற்கொள்ள இயலாததால் முந்தைய மாத மின் கட்டணத் தொகையை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை மின் பகிா்மான வட்டம் ஒண்டிப்புதூா் செயற்பொறியாளா் ஆா்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிா்வாகக் காரணத்தால் ஒண்டிப்புதூா் கோட்டத்துக்கு உள்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பகுதிகளில் ஏப்ரல் மாத மின் கணக்கீட்டுப் பணி மேற்கொள்ள இயலவில்லை. எனவே, இப்பகுதியைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் பிப்ரவரி மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்ட மின் கட்டணத் தொகையைச் செலுத்தி மின் துண்டிப்பை தவிா்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com