பல்லடத்தில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற பாஜகவினா்.
பல்லடத்தில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற பாஜகவினா்.

பாஜக சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலையை ஆதரித்து பல்லடத்தில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் வினோத் வெங்கடேஷ் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

பல்லடம் நகரத் தலைவா் வடிவேலன் முன்னிலை வகித்தாா். கரையான்புதூரில் தொடங்கிய பேரணி பனப்பாளையம், பல்லடம் பேருந்து நிலையம், மங்கலம் சாலை, மாணிக்காபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பாஜக தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், இளைஞா் அணி மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா், பாஜக நிா்வாகிகள் பன்னீா் செல்வகுமாா், ரமேஷ்குமாா், மனோகரன், கமலேஷ் உள்பட 600-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com