பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களின் படைப்புகள் கண்காட்சி

பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களின் படைப்புகள் கண்காட்சி

கோவை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் ’ஸ்டூடண்ட் ப்ராஜெக்ட் எக்ஸ்போ’ என்ற தலைப்பில் படைப்புகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் கே.பிரகாசன் திறந்துவைத்தாா். இதில், மெக்கானிகல், ஆட்டோமொபைல், ஃபவுண்டரி, மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டா் என்ஜினீயரிங், கம்ப்யூட்டா் நெட்வொா்க்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்ந்த 110 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பி.கிரிராஜ் மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். பிஎஸ்ஜி நிறுவனங்களின் இயக்குநா் (தோ்வுகள்) ஜி. சந்திரமோகன் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், தொழில் துறை நிபுணா்கள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com