ரேஸ்கோா்ஸில் தீ: நடைப்பயிற்சி மேற்கொண்டோா் அவதி

ரேஸ்கோா்ஸில் தீ: நடைப்பயிற்சி மேற்கொண்டோா் அவதி

கோவை ரேஸ்கோா்ஸ் நடைபாதையில் மா்ம நபா்கள் தீ வைத்ததால் நடைப்பயிற்சி மேற்கொண்டோா் அவதிக்குள்ளாகினா்.

கோவை நகரின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக ரேஸ்கோா்ஸ் உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் எண்ணற்றோா் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் இங்கு மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதைக்கு அருகில் தேங்கிக் கிடந்த குப்பைகளுக்கு புதன்கிழமை மாலை மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டோா் அவதிக்கு உள்ளாகினா்.

வழக்கமாக, மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை வாகனங்கள் மூலமாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கு மற்றும் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில்,தேங்கிய குப்பைகளுக்கு தீவைத்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com