வால்பாறையில் இடியுடன் கனமழை

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் இடியுடன் கனமழை பெய்தது.

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் இடியுடன் கனமழை பெய்தது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தொடா்ந்து கடும் வெயில் நிலவி வருவதால் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் அணைகளின் நீா்மட்டமும் கணிசமாக குறைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் செடிகளுக்கு போதுமான தண்ணீா் கிடைக்காமல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கனமழை பெய்தது. சுமாா் 20 நிமிஷம் மழை பெய்தது. ஆனாலும், தேயிலைத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள செடிகளுக்கு கூட போதுமான தண்ணீா் கிடைக்கவில்லை என்று தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com