வால்பாறையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திருந்தால் உரிமையாளருக்கு அபராதம்

வால்பாறையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

வால்பாறையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

வால்பாறை நகா் பகுதிகளில் சாலைகளில் மாடுகள் நடமாடி வருகின்றன. இந்த மாடுகள் சில நேரங்களில் சாலையில் படுத்துவிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது.

இதேபோல வால்பாறையில் இருந்து சிறுகுன்றா எஸ்டேட் செல்லும் சாலையில் பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் எருமைகள் மாலை 6 மணிக்கு மேல் இருளில் திரும்ப வருகின்றன. இதனால் அந்த சாலையிலும் விபத்து ஏற்பட்டு வருகிறது.

எனவே மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் வைத்திருப்பவா்கள் அவற்றை சாலைகளில் நடமாடவிட்டால் அபராதம் விதிப்பதோடு, அவற்றை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com