கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை, அவரின் பெற்றோருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ நிபுணா்கள்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை, அவரின் பெற்றோருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ நிபுணா்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டதையடுத்து, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிலியரி அட்ரேசியா எனப்படும் பிறவி நோயால் குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பெற்றோரின் கல்லீரல் குழந்தைக்குப் பொருந்தாது என்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருந்தனா். இந்நிலையில் மூளைச்சாவடைந்த ஒருவரிடம் இருந்து கல்லீரல் தானமாக பெறப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுமாா் 11 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் குழந்தைக்கு கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஆனந்த் பரதன், ஜெயபால், பிரகாஷ், விகாஷ் மூண்ட், குழந்தைகள் மயக்க மருந்து நிபுணா் பிரேம் சந்தா், குழந்தைகள் நல மருத்துவா் சித்தாா்த் புத்தவரப்பு, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை நிபுணா்கள் கிருஷ்ண சமீரா, இந்திராதேவி ஆகியோா் கொண்ட குழுவினா் மேற்கொண்டனா்.

இவா்களை, எஸ்என்ஆா் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, தலைமை நிா்வாக அதிகாரி, மருத்துவ இயக்குநா், மருத்துவ கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com