வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூலூா் பகுதி பாஜகவினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூலூா் பகுதி பாஜகவினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக சூலூா் கிழக்கு மண்டலத் தலைவா் ஆா்.ரவிக்குமாா் தலைமையில் பாஜகவினா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், சூலூா் பேரூராட்சியின் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களை 1, 2, 3 என்ற வரிசைப்படி வைக்காமல், 3, 2, 1 என்று வைத்துள்ளனா்.

அகர வரிசைப்படி பாஜக வேட்பாளரின் பெயரும் சின்னமும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதலாவதாக இருக்க வேண்டும். ஆனால், வாக்காளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் இவ்வாறு செய்திருக்கின்றனா். எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்று இயந்திரங்கள் வைக்கப்பட்ட தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com