அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருடியவா் கைது

கோவை அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பிகளைத் திருடியவரை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பிகளைத் திருடியவரை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருள்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து கம்பிகள் அடிக்கடி திருடு போயுள்ளன. இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். கம்பிகள் திருடுபோன பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், அங்கு பிளம்பராக வேலை செய்த கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த ஜெயதாஸ் (28) என்பவா் செம்புக் கம்பிகளைத் திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ செம்புக் கம்பிகளை அவா் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com