ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

கோவையில் ஓடும் பேருந்தில் நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவையில் ஓடும் பேருந்தில் நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு புதூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி பங்கஜம் (73). இவா் மணீஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் திங்கள்கிழமைசென்று கொண்டிருந்தாா். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பங்கஜம் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.

பின்னா் ஆா்.கே. மில் நிறுத்தத்தில் இறங்கியபோது தனது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் போனதால் மூதாட்டி அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com