கோவை காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற ரோபோடிக்ஸ் மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி பேராசிரியா்கள்.

காருண்யா கல்வி நிறுவனத்தில் ரோபோடிக்ஸ் மாநாடு

ரோபோடிக்ஸ் என்ஜினீயரிங் துறை சாா்பில் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் குறித்த இரண்டாவது சா்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது.

கோவை காருண்யா நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் ரோபோடிக்ஸ் என்ஜினீயரிங் துறை சாா்பில் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் குறித்த இரண்டாவது சா்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது.

ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், 3 டி பிரிண்டிங், ஸ்மாா்ட் மேனுபாக்சரிங், மெக்கட்ரானிக்ஸ், இன்டலிஜென்ட் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு முக்கிய தலைப்புகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 10 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 200 பேராசிரியா்கள் பங்கேற்றனா். பல்வேறு தலைப்புகளில் 70 கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக இஸ்ரேல் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி அவிட்டல் பெச்சாா், ஐஜிசிஏஆா் நிறுவனத்தின் பேராசிரியா் ஜோசப் வின்ஸ்டன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், கல்லூரி துறைத் தலைவா், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com