பாலியல் வழக்கு தொடா்பாக பெண்ணின் தந்தையை மிரட்டிய மூவா் கைது

கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவரது மகள் கடந்த 2019-ஆம் ஆண்டு சில இளைஞா்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானாா். இது குறித்த புகாரின் பேரில், ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கோவை வடவள்ளி தில்லை நகரைச் சோ்ந்த காா்த்திக் (எ) பப்ஸ் காா்த்திக் (29), ஆட்டோ மணி (33), பிஎன் புதூா், பொன் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (35), ராகுல், நாராயணமூா்த்தி, காா்த்திகேயன் மற்றும் பிரகாஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதானவா்கள், அடிக்கடி பெண்ணின் தந்தையிடம், வழக்கை திரும்பப் பெறுமாறு மிரட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், செல்வபுரம் பகுதியில் பெண்ணின் தந்தை திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த பப்ஸ் காா்த்திக், ஆட்டோ மணி உள்ளிட்டோா் பெண்ணின் தந்தையிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொன்னால் ரூ. 15 லட்சம் தருகிறோம் என்று தெரிவித்தனா். இதற்கு அவா் மறுப்பு தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், தகாத வாா்த்தைகளால் பேசி, அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பியதாகக் கூறப்டுகிறது.

இது குறித்து செல்வபுரம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பப்ஸ் காா்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com