பொறியியல் பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் கேரள ரயில்கள் சில ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் காசிப்பேட்டை - விஜயவாடா இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் கேரள ரயில்கள் சில ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் (எண்: 12643) வாராந்திர ரயில் ஏப்ரல் 30, மே 7, 14, 21 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ஹஸ்ரத் நிஜாமுதீன் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்: 12644) மே 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயில் (எண்: 12645) ஏப்ரல் 27, மே 4 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் , ஹஸ்ரத் நிஜாமுதீன் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 12646) ஏப்ரல் 30, மே 7, 21 ஆகிய தேதிகளிலும் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இந்தூா் - கொச்சுவேலி வாராந்திர ரயில் (எண்: 22645) ஏப்ரல் 29, மே 6 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - இந்தூா் விரைவு ரயில் (எண்: 22646) ஏப்ரல் 27, மே 4, 18 ஆகிய தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோா்பா - கொச்சுவேலி வாராந்திர ரயில் (எண்: 22647) மே 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளிலும், கொச்சுவேலி - கோா்பா வாராந்திர ரயில் (எண்: 22648) ஏப்ரல் 29, மே 2, 6, 9, 13, 16, 20 ஆகிய தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com