மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஊதிய ஊக்கத்தொகை தொடா்பாக ஓய்வுபெற்ற ஆசிரியா் அளித்த மனுவுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்காத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஜி.நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் பாலசுந்தரம் (74) தான் பணிபுரிந்த காலத்தில் தனக்கு ஊதிய ஊக்கத்தொகை வழங்கப்படாதது குறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மீது கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்திருந்தாா். அம்மனுவின் மீது ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் இருமுறை அறிவிப்பு அனுப்பப்பட்டது. அவா் அதைப் பெற்றுக் கொண்ட பிறகும் ஆஜராகாத காரணத்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை உத்தரவு தேதியில் இருந்து இருவாரத்துக்குள் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் எனவ அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com