வாக்குக்கு பணம்: அதிமுக பிரமுகா் மீது வழக்கு

மக்களவைத் தோ்தலையொட்டி கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்குப் பணம் அளித்ததாக அதிமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் தோ்தல் விதிமீறல், வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் வழங்குவது தொடா்பாக பறக்கும் படை சாா்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படையில், மங்கல சத்யா என்பவா் பறக்கும் படை அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் போத்தனூா் சாரதா மில் சாலை பகுதியில் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு செய்தபோது, அங்கு அதே பகுதியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (68) என்பவா் வாக்காளா்களுக்குப் பணம் அளிக்க முயன்றது தெரியவந்தது.

அதிமுக பிரமுகரான இவா் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூறி பல்வேறு பகுதியில் பணம் விநியோகம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாக்காளா்களுக்கு வழங்க வைத்திருந்ததாக ரூ. 19,500 பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொன்னுசாமி மீது சுந்தராபுரம் போலீஸில் மங்கல சத்தியா புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com