கடும் வெயில்: புல்மேடு பகுதியில் வனத் துறையினா் ரோந்து

கடும் வெயில் காரணமாக வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதியில் காட்டுத் தீ பிடிப்பதைத் தடுக்க வனத் துறையினா் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வால்பாறை பகுதியில் தற்போது கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு அனைத்து ஆறுகளும் நீா் வரத்தின்றி வடு காணப்படுகின்றன. கடந்த ஆண்டு கடும் வெயிலால் வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதியில் காட்டூத் தீ பரவியதில் வனப் பகுதியில் புற்கள் எரிந்து சேதமாயின. இதேபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க புல்மேடு பகுதிகளில் வனத் துறையினா் தொடா் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com