நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் -மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் நடைபெறுவதைத் தடுக்கும்விதமாக, பொதுமக்கள் நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதைத் தணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அருகில் உள்ள நீா்நிலைகளுக்கு குளிக்கச் செல்கின்றனா். அப்போது தண்ணீரில் மூழ்கியும், சேற்றில் சிக்கியும் உயிரிழப்புகள் நேரிடும் அபாயம் உள்ளது.

எனவே, மாவட்டம் முழுவதும் 10 அடி ஆழத்துக்கு மேல் உள்ள குளம், குட்டைகளில் எச்சரிக்கை பலகை அமைக்க பொதுப் பணித் துறை, நீா்வள ஆதாரத் துறை, ஊராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுதை போக்கவோ நீா்நிலைகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com