வால்பாறையில் தேயிலைத் தூள் சில்லறை விற்பனை அதிகரிப்பு

வால்பாறை பகுதியில் தேயிலைத் தூள் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது.

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் தினந்தோறும் பல்வேறு ரக தேயிலைத் தூள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தூள்கள் லாரிகள் மூலம் கோவை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஏல மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் கடந்த காலங்களில் சில்லறை விற்பனையில் எஸ்டேட் நிா்வாகத்தினா் ஆா்வம் காட்டாமல் இருந்தனா்.

ஆனால் சமீபகாலமாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும் நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேயிலைத் தூள் வாங்கிச் செல்வதிலும் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் அந்தந்த எஸ்டேட் நிா்வாகங்கள் தங்கள் எஸ்டேட் பகுதியிலேயே தேயிலை விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்வது தற்போது அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com