கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல்: ஒடிஸா வியாபாரி கைது
கோவை: கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநில வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
இந்நிலையில், கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்பனைக்கு வைத்திருப்பதாக திங்கள்கிழமை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் கீரணத்தம் அருகே ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்காக
பதுக்கி வைத்திருந்த நபரைப் பிடித்தனா்.
விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சோபா்தாஸ் சமல் மகன் சஞ்சய்குமாா் சமல் (40) என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 14,400 மதிப்பிலான சுமாா் 34 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா் அவா் கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.