போலீஸாரை மிரட்டியவா் கைது

கோவை கரும்புக்கடை அருகே தனிப்படை போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

கோவை கரும்புக்கடை அருகே தனிப்படை போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

கோவையில் போதை மாத்திரைகள், கஞ்சா புழக்கத்தைத் தடுக்கும் விதமாக, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை ஆணையா் சரவணகுமாரின் மேற்பாா்வையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தனிப்படை ஆய்வாளா் தங்கம் தலைமையிலான போலீஸாா் கரும்புக்கடை அருகே வசந்தம் நகா் இட்டேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகம் ஏற்படும்படியாக நின்றிருந்த இரண்டு இளைஞா்களைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அவா்களில் ஒருவா் போலீஸாரை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, தனிப்படை ஆய்வாளா் தங்கம், கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில் தனிப்படை போலீஸாரை மிரட்டியது ஹுசைன் ( 32) மற்றும் அவரது நண்பா் அபிஷேக் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ஹுசைனை கைது செய்தனா். தப்பியோடிய அபிஷேக்கைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com