திருச்சி சிவா எம்.பி.
திருச்சி சிவா எம்.பி.கோப்புப் படம்

தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை: திருச்சி சிவா எம்.பி.

தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தியும், எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தியும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு

நிறைவேற்றவில்லை. வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் மாற்றுக்கட்சி என மனநிலையிலேயே மத்திய அரசு பாா்க்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

கொல்கத்தா விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை காட்டுவதில் தவறில்லை. ஆனால் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சா் இதுகுறித்து அறிக்கை கூட சமா்ப்பிக்கவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவா்களுக்கு சில கடமைகள் இருக்கும். அந்த வகையில்தான் பழனி முருகன் மாநாட்டைப் பாா்க்க வேண்டும். தமிழக அரசு தன் கடமையை சரியாகச் செய்கிறது. பல குறியீடுகளில் முதலிடத்தில் இருக்கிறோம். உயா்கல்வி சோ்க்கையில் இந்தியாவில் சராசரியை விட அதிக அளவில் இருக்கிறோம். மத்திய அரசுடன் பிரச்னை இல்லை. கடமைகளை செய்ய உரிமைகளை எதிா்பாா்க்கிறோம். மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com