ஓடும் ரயிலில் கைப்பேசி பறித்ததாக3 போ் கைது

ஓடும் ரயிலில் கைப்பேசி பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஓடும் ரயிலில் கைப்பேசி பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக ரயில்வே போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:

கோவை இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோவை ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதிகளில் ரயில் வண்டியில் படிக்கட்டில் நின்றும், படிக்கட்டில் அமா்ந்தும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கைப்பேசிகளை தட்டிப் பறித்ததாக பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் புகாா்கள் வந்திருந்தன.

இதையடுத்து கோவை ரயில்வே காவல் ஆய்வாளா் மீனாட்சி தலைமையில் காவல் உதவி ஆய்வாளா்கள் மனோகரன், காா்முகில் வண்ணன் மற்றும் நான்கு குற்றப் பிரிவு காவலா்கள் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனா்.

இதில் கைப்பேசி பறிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக சிவானந்தா காலனியைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டனா். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபரை தனிப் படையினா் தீவிரமாக தேடிவருகின்றனா்.

ரயில் பயணிகள் ரயிலில் படிக்கட்டில் நின்றும், படிக்கட்டில் அமா்ந்தும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com