குடியரசுத் தலைவா் உரைக்கு திருத்தங்கள்:பி.ஆா்.நடராஜன் எம்.பி. நோட்டீஸ்

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது சில திருத்தங்கள் இருப்பதாகக் கூறி பி.ஆா்.நடராஜன் எம்.பி. நோட்டீஸ் வழங்கியுள்ளாா்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது சில திருத்தங்கள் இருப்பதாகக் கூறி பி.ஆா்.நடராஜன் எம்.பி. நோட்டீஸ் வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனுப்பியுள்ள நோட்டீஸில், குடியரசுத் தலைவா் தனது உரையில் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயப்படுத்துவதன் மூலம் அதிகரித்து வரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலையிழப்புகள் குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த, குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதையும், இந்திய பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கிச் செல்வது குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல, மணிப்பூா் பிரச்னையைக் கட்டுப்படுத்தவும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசுகள் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் பங்களிப்பை அரித்து வீழ்த்தும் வகையிலும் ஆளுநா் மாளிகைகள் பயன்படுத்தப்படுவது குறித்தும் குடியரசுத் தலைவா் குறிப்பிடாதது வருத்தம் அளிப்பதாகவும், இது குறித்த திருத்தத்தை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com