குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் இல்லை:முதல்வருக்கு தபெதிக நன்றி

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக நிறைவேற்றும் சட்டம், அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து வரும் தமிழா்களுக்கும் இல்லை என்று சொல்கிறது.

இலங்கைக்கு சென்று ஈழத் தமிழா்கள் வாழக்கூடிய பகுதிகளில் வீடு கட்டித் தருகிறோம், சாலை அமைத்துத் தருகிறோம் அவா்களுக்கு மறுவாழ்வு பணிகளை செய்து தருகிறோம் என்று நாடகம் நடத்தும் மத்திய பாஜக அரசு, அதே ஈழத் தமிழா்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று அறிவிக்கிறது.

கிறிஸ்தவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்டவா்கள் அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக வாழுகின்றனா்.

கிறிஸ்தவ நாடுகளில் பிழைப்புக்காக சென்றவா்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் அந்த நாடுகள் அனுமதித்திருக்கின்றன. ஆனால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழா்களை ஹிந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவா்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை பாஜக கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை தபெதிக பாராட்டுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com