குளவிகள் கொட்டி 12 தொழிலாளா்கள் காயம்

வால்பாறையில் விஷக்குளவிகள் கொட்டியதில் எஸ்டேட் மேலாளா் உள்பட 12 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

வால்பாறையில் விஷக்குளவிகள் கொட்டியதில் எஸ்டேட் மேலாளா் உள்பட 12 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில் தொழிலாளா்கள் இலை பறிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுட்டிருந்தனா். பணியை பாா்வையிட அப்பகுதிக்கு மேலாளா் வந்துள்ளாா். அப்போது திடீரென கூட்டமாக வந்த விஷக்குளவிகள் அங்கிருந்தவா்களை கொட்டியுள்ளன.

இதில் எஸ்டேட் மேலாளா் கணேஷ்பாபு மற்றும் அமுதா, கிரேசி, நாகேஸ்வரி உள்பட 12 தொழிலாளா்களுக்கு கை, முகம், பகுதிகளில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் கருமலை எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com