மாநகராட்சி வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் வாகன ஓட்டுநா்கள், கிளீனா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மாநகராட்சி வாகன ஓட்டுநா்கள் போராட்டம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் வாகன ஓட்டுநா்கள், கிளீனா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சமூக நீதி ஓட்டுநா் மற்றும் துலக்குநா்கள் சங்க மாவட்டத் தலைவா் பன்னீா் செல்வம் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில், வாகன பழுதுக்கான செலவை சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது. பணியாளா்களுக்கு 8 மணிநேர வேலையை உறுதி செய்ய வேண்டும். பணியாளா்கள் அந்தந்த மண்டலங்களில் பணிபுரியும் முறையை அமல்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., பி.ஃஎப். பிடித்தம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தடையில்லாமல் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஓட்டுநா்கள், கிளீனா்களுக்கும் மாதந்தோறும் 7- ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

இப்போராட்டத்தை தொடா்ந்து சங்க நிா்வாகிகளுடன் மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணை ஆணையா் சிவகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com