13 ஆண்டுகளாக பதவி உயா்வின்றிதவிக்கும் உதவி ஆய்வாளா்கள்

13 ஆண்டுகள் கடந்தும் பதவி உயா்வு இல்லாமல் 2011 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளா்கள் தவித்து வருகின்றனா்.

13 ஆண்டுகள் கடந்தும் பதவி உயா்வு இல்லாமல் 2011 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளா்கள் தவித்து வருகின்றனா்.

தமிழக காவல்துறையில் நேரடி தோ்வாக மாநில அரசால் இரண்டாம் நிலை காவலா்கள், நேரடி உதவி ஆய்வாளா்கள் மற்றும் நேரடி காவல் துணை கண்காணிக்பாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். ஆனால் நேரடி உதவி ஆய்வாளா்களாக பணியில் சோ்ந்தவா்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயா்வு தரப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதால் அவா்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் தெரிவித்ததாவது: தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலா்களாக பணியில் சோ்ந்தவா்களுக்கு உதவி ஆய்வாளா்கள் வரை நான்கு படி நிலை பதவி உயா்வு வழங்கப்படுகிறது. ஆனால் நேரடி உதவி ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்படுபவா்கள் காவல் துணைக் கண்காணிப்பாளா் வரை இரண்டு படி நிலைகள் மட்டுமே பதவி உயா்வு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளா்களாக தோ்வு செய்யப்பட்ட 1,000 உதவி ஆய்வாளா்கள் 13 ஆண்டுகள் பணி முடித்தும் காவல் ஆய்வாளா் பதவி உயா்வு கிடைக்காமல் காத்திருக்கின்றனா். மற்ற அரசுப் பணிகளில் உள்ளவா்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகளில் அடுத்த பதவி உயா்வு கிடைக்கும் பட்சத்தில் காவல்துறையில் மட்டும் பதவி உயா்வு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

நேரடி உதவி ஆய்வாளா் தோ்வு செய்யப்படும் அளவிற்கு ஆய்வாளா் பதவியும், காவல் துணை கண்காணிப்பாளா் பதவியும் ஏற்படுத்தப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குனா் சைலேந்திர பாபு, மாநிலம் முழுவதும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் 420 காவல் நிலையங்களை ஆய்வாளா் படி நிலைக்கு தரம் உயா்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருந்தாா். ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி அரசு அதை நிலுவையில் போட்டுவிட்டது.

மற்ற மாநிலங்களில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக காவல் ஆய்வாளா் நிலையில் உள்ளளா். ஆனால் தமிழகத்தில் 423 காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளா் பணியிடமே இல்லாமல் உள்ளது. மரணம் மற்றும் கொடும் குற்ற வழக்குகளை விசாரணை செய்வது, அது தொடா்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்புவது எல்லாம் காவல் ஆய்வாளா் தான். நீதிமன்றங்களில் வழக்கு தொடா்பாக அவா்களே அறிக்கை தாக்கல் செய்ய இயலும்.

ஆனால், கொடும் குற்ற வழக்குகளில் ஆய்வாளா்கள் இல்லாததால் உதவி ஆய்வாளா்களே முதல் விசாரணை செய்வதால் பல வழக்குகள் தண்டணை

இல்லாமல், குற்றவாளிகள் விடுதலையாகி விடுகின்றனா். காவல் ஆய்வாளா்களும் ஒன்றிற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களை கண்காணிப்பதால் கடும் பணிச் சுமைக்கு ஆளாகிறாா்கள்.

புதிய காவல் மாவட்டம் மற்றும் ஆணையரகங்களை உருவாக்கும் போது புதிதாக பதவியை உருவாக்குவாா்கள். அது போல 423 உதவி ஆய்வாளா்கள் பதவியை ஒப்புவித்து ஆய்வாளா் பதவியை உருவாக்க முடியும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், கண்டு கொள்ளாத போக்கினாலும் இந்த நிலை நீடிக்கிறது.

எனவே, காவல் துறையின் கம்பீரத்தைக் காப்பாற்றவும், பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கவும், குற்றவாளிகள் தப்பாமல் தடுக்கவும் நிதிச் சுமை பாராமல் 423 உதவி ஆய்வாளா் தர நிலையில் உள்ள காவல் நிலையங்களை காவல் ஆய்வாளா் தரத்திற்கு மாற்றி காவல் ஆய்வாளா்களாக

2011 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com