சாா்நிலை அலுவலா்களுக்கானபுத்தாக்கப் பயிற்சி

கோவை மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்நிலை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாா்நிலை அலுவலா்களுக்கானபுத்தாக்கப் பயிற்சி

கோவை மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்நிலை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியை மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன், கோவை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பிரபு, துடியலூா் கூட்டுறவு விவசாய சேவை ஸ்தாபன இணைப் பதிவாளரும், செயலாட்சியருமான சிவகுமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், பணி மேலாண்மை, நேர மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா்கள் விஜயகணேஷ், ஆனந்தன், பிராங்க்ளின் தாமஸ், கோபாலகிருஷ்ணன், ஸ்வேதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com