மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்ரவரி 11, 18-இல் சிறப்பு முகாம்

கோவை மாநகரப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த வருகிற பிப்ரவரி 11, 18 ஆகிய இரு நாள்கள் மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த வருகிற பிப்ரவரி 11, 18 ஆகிய இரு நாள்கள் மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனுமதியற்ற மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, மக்கள் 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 20-ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த கோவை மாநகராட்சி மூலமாக வருகிற பிப்ரவரி 11, 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

மக்கள், தங்களின் மனை ஆவணம், வரைபடம் மற்றும் ரூ.500 விண்ணப்பக் கட்டணத்தை இணையத்தில் செலுத்தி, விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com