தகுதியில்லாத நிறுவனங்களுக்கு செம்மொழிப் பூங்கா பணி: ஒப்பந்ததாரா் சங்கம் குற்றச்சாட்டு

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களுக்கு செம்மொழிப் பூங்கா பணி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களுக்கு செம்மொழிப் பூங்கா பணி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்க செயலாளா் சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ப்ளூ மெட்டல், எம். சாண்ட், பி. சாண்ட் விலை கடந்த 1-ஆம் தேதி உயா்ந்தது.

ஒப்பந்ததாரா்கள் கைவசம் உள்ள பழைய வேலையை முடிப்பதற்கு ஏதுவாக, கிரஷா் சங்கம் வருகின்ற மே மாதம் வரை பழைய விலைக்கே கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். செம்மொழிப் பூங்கா பணிகளுக்காக நடந்த ஒப்பந்தப் புள்ளியில் தகுதியில்லாத சில நிறுவனங்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான ஒப்பந்தாராா்கள் மட்டுமே ஒப்பந்தப் புள்ளியில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.

சிலா் தங்களிடம் இருப்பில் உள்ள அதிகப் பணிகளை மறைத்து புதிய ஒப்பந்தப் பணிகளை எடுக்கின்றனா். மேலும், போதிய இயந்திர தளவாடங்களின்றியும், போலியான அனுபவச் சான்றிதழ்களைச் சமா்ப்பித்தும் ஒப்பந்தப் பணிகளை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com