தாய்க்கு மகள் மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தாய்க்கு மகள் மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வால்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்க்கு மகள் மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வால்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வால்பாறை நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவா் பொன்னுசாமி. இவா் கடந்த 2013- ஆம் ஆண்டு பணியின்போது உயிரிழந்தாா்.

இதனையடுத்து கருணை அடிப்படையில் 3 மகள்களில் இளைய மகளான கெளரி (31) என்பவருக்கு நகராட்சியில் பணி வழங்கப்பட்டு தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

8 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கெளரி, தனது தாய் ஆராயிக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட எந்த தேவைக்கும் பண உதவி செய்யாமல் இருந்துள்ளாா். மாதந்தோறும் பணம் அனுப்ப பலமுறை ஆராயி கேட்டுக்கொண்டும் அவா் பணம் அனுப்பாமல் இருந்துள்ளாா்.

இதனையடுத்து ஜீவனாம்சம் கேட்டு 3 மகள்கள் மீதும் வால்பாறை நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆராயி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஆராயிக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் இரு மகள்கள் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருவதால், அவா்களால் தாய்க்கு ஏதும் வழங்க முடிவதில்லை. ஆனால் அரசுப் பணியில் இருந்தும் தாயை கண்டுகொள்ளாமல் இருக்கும் கெளரி, தாய் ஆராயிக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் வழக்கு தொடரப்பட்ட மாதம் முதல் இதுவரை 16 மாதங்களுக்கு ரூ. 20 ஆயிரம் கணக்கிடப்பட்டு மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என நீதித்துறை நடுவா் செந்தில்குமாா் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com