குன்னத்தூா் குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கோவை, பிப். 4: அன்னூா் அருகேயுள்ள குன்னத்தூா் குளம் சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

கோவை மாவட்டம், அன்னூா் வட்டத்துக்குள்பட்ட குன்னத்தூா் பகுதியில் 4 ஏக்கா் பரப்பளவில் குளம் உள்ளது. புதா் மண்டியும், குப்பைக் கழிவுகள் மிகுந்தும் காணப்படும் இந்தக் குளத்தை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன், கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்பு, தன்னாா்வலா்கள், அப்பகுதி மக்கள் இணைந்து குன்னத்தூா் குளம் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் மூலமாக வாரந்தோறும் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியாா் நிறுவனம், இந்தக் குளத்தை சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, ராக் பொது நல அமைப்புடன் இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் குளம் சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், கௌசிகா நீா்கரங்கள் கூட்டமைப்பு, குன்னத்தூா் குளம் பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com