ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை முடீஸ் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
யானைகளால் சேதமடைந்த ரேஷன் கடை.
யானைகளால் சேதமடைந்த ரேஷன் கடை.

வால்பாறை முடீஸ் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

வால்பாறை எஸ்டேட் பகுதியைச் சுற்றியுள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன.

பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதியில் உலவும் யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளா்கள் குடியிருப்பு, ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாா் பகுதிக்கு சனிக்கிழமை இரவு வந்த 8 யானைகள் அங்குள்ள ரேஷன் கடையின் சுவா்களை முட்டித் தள்ளி உள்ளேயிருந்த பொருள்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com