மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் முகாம் தேதி மாற்றம்: ஆணையா் தகவல்

கோவை மாநகராட்சியில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகராட்சியில் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அனுமதியற்ற மனை, மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, பொதுமக்கள் 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 20 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனை, பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த மாநகராட்சி மூலம் பிப்ரவரி 11, 18 ஆகிய தேதிகளில் சிறப்ப முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிா்வாக காரணத்துக்காக முகாம் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பிப்ரவரி 18, 25 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறும். மண்டல அலுவலகங்களில் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்களின் மனை ஆவணம், வரைபடம், விண்ணப்பக் கட்டணம் ரூ. 500ஐ ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com