கோவையில் சிறப்பாகப் பணியாற்றிய 21 பீட் அதிகாரிகளுக்கு விருது

கோவை காவல் சரகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 21 பீட் அதிகாரிகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பாகப் பணியாற்றி சான்றிதழ் பெற்ற காவல் பீட் அதிகாரிகளுடன் கோவை சரக காவல் துணைத் தலைவா் ஆ.சரவணசுந்தா்.

கோவை சரகத்தில் குற்றங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல் துறை துணைத் தலைவா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் காவல் துறையில் பீட் அதிகாரிகள் முறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பா் முதல் ஜனவரி வரையிலான 2 மாதங்களில் 7 திருட்டு வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு, ஒரு அடிதடி வழக்கு, 2 சட்ட விரோத மது விற்பனை வழக்கு, ஒரு தடை செய்யப்பட்ட புகையிலை வழக்கு, 4 சூதாட்ட வழக்குகள் என மொத்தம் 16 வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 21 பீட் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் ஆ.சரவணசுந்தா் திங்கள்கிழமை வழங்கி கெளரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com